Friday 18 November 2011

Kamal hassan's Kavithai about god.

கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காத தாம்
அதைப் பயந்ததை யுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி
பெரிதேதும் வழியில்லை யாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்றது
விதியொன்று செய்வித்த தாம்
அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாகச் செவிடாக மலடாக முடமாகக்
கரு சேர்க்கும் திருமூலமாம்
குஷ்டகுஹ்யம் புற்று சூலைமூலம் எனும்
குரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின்
புதுஜென்மம் தந்தருளு மாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாட லாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன்நின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி
மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்த தும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்ட தும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும்
பரிவான பர பிரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமார தொழு சக்தியை
மற்றவர் வையுபயங் கொண்டுநீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்
ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிகச்சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தி யை
தையடா ஊசியிர் தையனத் தந்தபின்
தக்கதை தையா திரு
உய்திடும் மெய்வழி ஊதாசினித்த பின்
நைவதே நன்றெனின் நை